ஜப்பான் அணுக் கழிவு நீரை வெளியேற்றியதற்குச் சீனா கண்டனம்
2023-08-24 15:28:13

சர்வதேசச் சமூகத்தின் வலுவான சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ஃபுகுஷிமா அணு உலை விபத்தில் மாசுபட்ட நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை ஜப்பான் அரசு ஆகஸ்ட் 24ஆம் நாள் ஒருசார்பாக தெடங்கியது. இதற்குச் சீனா வன்மையான எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குத் தவறான செயலை ஜப்பான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடல், மனித குலத்துக்குப் பொதுவான சொத்தாகும். ஜப்பானின் இச்செயல் சர்வதேசப் பொது நலனைப் புறக்கணிக்கும் தீவிர சுயநல மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும் என்றார்.