பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம்: புதிய தொடக்கம்
2023-08-24 17:14:28

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டிற்கான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்றார்.

பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பு நாடுகளாக, அர்ஜென்டீனா, எகிப்து, எத்தியோபியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை சேர்ந்துள்ளன என்று இந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து ஷி ச்சின்பிங் கூறுகையில்,

இந்த விரிவாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் மனவுறுதியை இது வெளிக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் நலனுக்கும் இது பொருந்தியது. இந்த விரிவாக்கம், பிரிக்ஸ் அமைப்பின் புதிய தொடக்கமாகும். இது பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்கு உந்து சக்தியை ஊற்றும். நாங்கள் கூட்டாக முயற்சி செய்து, புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.