வாக்னர் ஆயுதப்படையின் நிறுவனர் உயிரிழப்பு
2023-08-24 14:25:21

ரஷியக் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிறுவனம் 23 ஆம் நாளிரவு வெளியிட்ட செய்தியின் படி, வாக்னர் ஆயுதப்படையின் நிறுவனர் யெவ்கெனி பிரிகோஜின் அன்று நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். 23ஆம் நாள் இரவு அவர் பயணித்த தனி விமானம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குப் பறந்து கொண்டிருந்த போது மேற்கு ரஷியாவின் டெவெர் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியது. பூர்வாங்க தகவலின் படி, இந்த விமானத்தில் பயணித்த பத்து பேர் அனைவரும் உயிரிழந்தனர்.