அமெரிக்க வணிக அமைச்சரின் சீன பயணம்
2023-08-24 19:44:22

சீன வணிக அமைச்சர் வாங் வென்தொவ்வின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வணிக அமைச்சர் ரேய்முங்த் ஆகஸ்ட் 27 முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷு யுடிங் அம்மையார் கூறுகையில்,

சீனா அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவுக்கு சீனாவின் நிலைபாட்டை தெரிவிக்கும். பொருளாதார மற்றும் வர்த்தகத்திலுள்ள சர்ச்சைகளை நீக்குவதும், ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதும் குறித்து அமெரிக்காவுடன் விவாதம் செய்ய சீனாவிரும்புகின்றது என்றார்.

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவின் சாராம்சம், ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது ஆகும். பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை மேற்கொள்வது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் நலனுக்குப் பொருந்தியது என்று அவர் தெரிவித்தார்.