பலதரப்புவாதப் பாதுகாப்பு:பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள்
2023-08-24 11:20:39

பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 23ம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கி, மனித தொடர்பு பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உலகளாவிய ஆட்சிமுறையை அமைப்பு முறையை மேம்படுத்தி, பலதரப்புவாதத்தை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இவ்வுச்சி மாநாட்டில் பேசிய இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகள் பல சாதனைகளைப் படைத்துள்ளதோடு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை, பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் வாழ்க்கைக்கு ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்தார். மேலும், விண்வெளி, கல்வி, தொழில்நுட்பம், பாரம்பரிய மருத்துவம் முதலியவற்றில் பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்தார். தவிர, பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்துக்கு இந்தியா முழு ஆதரிக்கின்றது என்றும் இது தொடர்பாக ஒத்த கருத்துக்களை எட்டி, பல முன்னேற்றங்களைப் பெற வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.