சீன-தென்னாப்பிரிக்கச் செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்பு
2023-08-24 15:52:51

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தென்னாப்பிரிக்காவில் அரசுப் பயணம் மேற்கொண்ட போது, உள்ளூர் நேரப்படி, ஆகஸ்ட் 23ஆம் நாள், சீன ஊடகக் குழுமமும் தென்னாப்பிரிக்க ஒளிபரப்பு நிறுவனமும் கூட்டாக ஆவணப் படம் ஒன்றை எடுப்பதாக அறிவித்துள்ளன. இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எடுக்கப்படும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு சீன-தென்னாப்பிரிக்க நட்புறவு ஒத்துழைப்புக்கான விளக்கம் என்பதாகும். உடன்பிறப்பாளர் போன்ற இரு தரப்புறவு, இரு நாடுகளுக்கான பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகத்தைக் கையோடு கைகோர்த்து உருவாக்கும் முன்னேற்றங்கள் இந்த ஆவணப் படத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.