நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3
2023-08-24 15:51:43

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 23ஆம் நாள் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனின், சீனா ஆகிய நாடுகளை அடுத்து, நிலாவில் ஆய்வுக் கலத்தை நிலைநிறுத்தியுள்ள 4ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது.

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் சுமார் 2 வாரக்காலம் இயங்கும். இக்காலத்தில் நிலவின் மேற்பரப்பிலுள்ள மண் மற்றும் கற்பாறை மீதான ஆய்வு நடைபெறும். தவிரவும், நிலவின் தென்துருவத்தில் நீர்பனிக்கட்டிகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் இவ்விண்கலம் தேடல் மேற்கொள்ளும்.