மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது சமூகம்
2023-08-25 19:18:05

சீன அரசவை செய்தி அலுவலகம் வெளியிட்ட செய்தியின் படி, 20ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டம்பர் 16 முதல் 19ஆம் நாள் வரை சீனாவின் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நன் நீங் நகரில் நடைபெறவுள்ளது.

ஆசியானுடனான ஒத்துழைப்புகளை சீனா பன்முகங்களிலும் விரிவாக்கும். இருதரப்பும், பொருளாதார வர்த்தக நிலையை கூட்டாக உயர்த்தி, மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது சமூகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று வணிக அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் அறிமுகம் செய்தார்.

சீனாவும் ஆசியான் நாடுகளும், வர்த்தக அளவை கூட்டாக அதிகரித்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கோட்பாட்டிலுள்ள வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.