அணுக்கழிவு நீரை வெளியேற்றும் ஜப்பான் பெரும் வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பேற்க வேண்டும்
2023-08-25 10:06:39


படம்:CFP

உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 24ஆம் நாள் பிற்பகல் 1 மணிக்கு, எண்ணற்ற மக்களின் எதிர்ப்புக்கு இடையில், ஜப்பான் அரசு ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றத் தொடங்கியது. கடல் சூழல் மற்றும் மனிதக் குலத்தின் ஆரோக்கியம் மீது தொடுக்கப்பட்ட“தாக்குதல்” இது வாகும். இதே நாள், உலகக் கடல் சூழல் பேரிடர் தினமாக  மாறியுள்ளது.

அணு ஆற்றலை மக்கள் அமைதியாகப் பயன்படுத்திய பிறகு, கடலுக்குள்  கதிரியாக்க நீரை வேண்டுமென்றே வெளியேற்றுவது இதுவே முதல்முறையாகும். மேலும், இதனைக் கையாள தற்போதுவரை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை கிடைக்காது. இதனால், சர்வதேசச் சமூகம் மாபெரும் அபாய நிலையில் சிக்க வைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.