பிரிக்ஸ் விரிவாக்கத்துக்குப் பிறகு உயர்தர வளர்ச்சி
2023-08-25 09:22:39

பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 24ம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இணைய சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டீனா, ஈரான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த விரிவாக்கம் இந்த உச்சிமாநாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும்.

தற்போது பிரிக்ஸ் நாடுகளின் விரிவாக்கம், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையின் ஈர்ப்பு ஆற்றலை நிரூபித்துள்ளதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஒரு மரத் துண்டைக் கொண்டு் ஒரு வீட்டைக் கட்டியமைக்க முடியாது என்னும் பழமொழி உண்டு. திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவை பிரிக்ஸ் அமைப்பின் குறிக்கோள்.

உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்தைக் கொண்ட புதிய தொடக்கப் புள்ளியாக, பிரிக்ஸ் ஒத்துழைப்பு உயர்தர வளர்ச்சியை நோக்கி எடுத்து வைத்த முக்கிய காலடி இதுவாகும்.  இது உலக அமைதி மற்றும் வளர்ச்சியின் சக்தியை மேலும் பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.