உலக பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தி சீனா
2023-08-25 18:33:20

அண்மையில் சீன அரசு, குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, சில துறைகளுக்கு ஆதரவு அளிக்கின்றது என்று அன்னிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். அறைகூவல்களைச் சந்தித்த போதிலும் சீனா திறப்பு கொள்கை மேற்கொள்ளும் பணி தெளிவானது என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் உயர் நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

சீன பொருளாதாரம் நீண்டகாலமாக சீராக வளரும் நிலைமை மாறவில்லை. சீனா, உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி, பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளைக் கொடுக்கும் என்றார்.