சீன-இந்திய எல்லை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது
2023-08-25 17:21:00

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பினரும், சீன-இந்திய உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து, கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் கொண்டுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 25ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீன-இந்திய உறவின் மேம்பாடு, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் நலன்களுக்குப் பொருந்தியது. அது, உலகம் மற்றும் பிராந்திய அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கும் நன்மை புரியும். இரு தரப்பும், எல்லை பிரச்சினையை உரிய முறையில் கையாண்டு, எல்லை பகுதியில் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீன-இந்திய எல்லை பிரச்சினையில், சீனாவின் நிலைப்பாடு, நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது என்று வாங் வென்பின் மீண்டும் தெரிவித்தார்.