தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி மற்றும் வரி கொள்கை ஆதரவு
2023-08-25 19:18:39

வரி மற்றும் கட்டணங்களைக் குறைப்பது, நிதி கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, ஒதுக்கீட்டு வழிகாட்டின் பங்கை வெளிக்காட்டுவது முதலிய துறைகளில் நிதி மற்றும் வரி ஆதரவு கொள்கைகளின் செயலாக்கத்தை முன்னேற்றி, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் உயர்தர வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்று சீன நிதி அமைச்சகம் 25ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.

ஒத்துக்கீட்டைக் கண்காணிக்கும் முறைமையின் மூலம், மானியத்தின் பயன்பாட்டைப் பதிவு செய்து கண்காணித்து, குறிப்பிட்ட பிரதேசங்களில் கொள்கை ஆதரவை அதிகரித்து, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் இயக்க நிர்ப்பந்தம் மற்றும் உண்மையான சிக்கல்களைத் தணிவு செய்ய வேண்டும் என்றும் இவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.