ஆப்பிரிக்காவில் எத்தகைய நவீனமயமாக்கல் இருக்கும்?
2023-08-25 16:53:38

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ரமஃபோசாவும் ஆகஸ்ட் 24ஆம் நாள் வியாழக்கிழமை ஜோகன்னஸ்பர்க் நகரில் சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட்டாக தலைமை தாங்கினர்.

இதில் நவீனமயமாக்கத்தை முன்னெடுத்து சீனா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என்ற தலைப்பில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.

அப்போது, நவீனமயமாக்கத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு வெவ்வேறு வழிமுறை உண்டு எனக் குறிப்பிட்ட ஷிச்சன்பிங், எத்தகைய வளர்ச்சி முறை ஆப்பிரிக்காவுக்கு மிகவும் பொருத்தமானது என்பதில் ஆப்பிரிக்க மக்கள் மிக அதிக கருத்துரிமை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்க நவீனயமாக்கத்திற்கு உதவி வழங்குவதற்கும் ஆப்பிரிக்காவின் தொழிலாக்கத்தை ஆதரிப்பதற்கான முன்னெடுப்பை தொடங்கி வைப்பது,  ஆப்பிரிக்காவின் வேளாண்மை நவீனமயமாக்கத்திற்கு உதவி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது, சீன-ஆப்பிரிக்க திறமை வளர்ப்புக்கான ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவது ஆகிய மூன்று முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

மேலும், அடுத்த ஆண்டு சீன–ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் சீனாவில் நடைபெறும் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.