ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு முன்னேற்றம்
2023-08-25 14:30:44

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகஸ்ட் 24ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 10 ஆண்டுகாலத்தில், 152 நாடுகள், 32 சர்வதேச அமைப்புகள் முதலியவற்றுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவுக்கான 200 ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது. சீனாவுடன் தூதாண்மையுறவினை நிறுவியுள்ள நாடுகளில் 83 விழுக்காட்டு நாடுகள் இதில் பங்கெடுத்துள்ளன.  

கடந்த 10 ஆண்டுகாலத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு குறிப்பிட்ட சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவை, சீன-லாவோஸ் இருப்பு பாதை முதலிய முன்மாதிரி திட்டப்பணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடான வர்த்தகத்தின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை, நாணயம் சாரா நேரடியான முதலீட்டுத் தொகை முறையே 8.6 மற்றும் 5.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. தவிரவும், இத்தகைய நாடுகளிடையில் ஒன்றில் ஒன்று செய்துள்ள முதலீட்டுத் தொகை 27 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.