நவீனமயமாக்கப் பாதையில் நல்ல கூட்டாளிகளான சீனாவும் ஆப்பிரிக்காவும்
2023-08-26 17:06:20

போதிய மின்சாரம், உணவகங்களின் இயக்க நேரம் நீடிப்பு, வேளாண் துறையில் இறைப்பி பாசனம் பயன்பாடு ஆகியவற்றால், கென்யாவின் வடக்கிழக்கு பகுதியிலுள்ள கரிசா மாவட்டத்தைச் சேர்ந்த குடிமக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. சீனாவின் தொழில் நிறுவனம் கட்டியமைத்த கரிசா ஒளிமின்னழுத்த ஆற்றல் நிலையம், அங்குள்ள மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்த்து, கென்யாவின் வளர்ச்சிக்கு பசுமை இயக்காற்றலை ஊட்டியுள்ளது.

சீனா, உலகத்தில் மிகப் பெரிய வளரும் நாடாகும். ஆப்பிரிக்கா, வளரும் நாடுகளைக் கொண்ட கண்டமாகும். ஆழ்ந்த பாரம்பரிய நட்புறவு, ஒன்றுக்கொன்றின் உறுதியான அரசியல் நம்பிக்கை, நெருங்கிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்ட இரு தரப்பும், நவீனமயமாக்கப் பாதையில் முன்னேற்றி வருகின்ற நல்ல கூட்டாளிகளாக விளங்கி வருகின்றன.

தற்போது, சீனாவின் நவீனமயமாக்கம் முன்னேற்றப்பட்டு வருகிறது. அத்துடன், நவீனமயமாக்கம் மற்றும் சொந்த வளர்ச்சிக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா ஆக்கமுடன் ஆதரவளித்து வருகிறது.

பெரும் மாற்றங்கள் காணப்பட்டுள்ள உலகச் சூழ்நிலையில், தற்போதைய சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக மேலாண்மை குறித்து, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒத்த கருத்து உண்டு. சீன-ஆப்பிரிக்க உறவு மற்றும் ஒத்துழைப்பு சீராக இருந்தால், உலக வளர்ச்சிக்கு மேலதிக இயக்காற்றல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.