ஜி20 உச்சிமாநாட்டுக்காக புதின் இந்தியாவுக்குச் செல்ல மாட்டார்:ரஷியா
2023-08-26 18:18:33

செப்டம்பரில் நடைபெற உள்ள ஜி20 அமைப்பின் 18ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷிய அரசுத் தலைவர் விளாடிமீர் புதின் இந்தியாவுக்குச் செல்ல மாட்டார் என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்தி செயலாளர் பெஸ்கோவ் தெரிவித்ததாக அந்நாட்டின் தாஸ் செய்தி நிறுவனம் ஆகஸ்ட் 25ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

புதினின் தற்போதைய பணிக்கான நிகழ்ச்சி நிரலில் அதிக ஏற்பாடுகள் உள்ளன. அவரது கவனத்தில் சிறப்பு இராணுவ நடவடிக்கை இன்னும் மிக முக்கிய அம்சமாகும். எனவே இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் தில்லிக்குச் செல்வதற்குத் திட்டமில்லை என்று பெஸ்கோவ் கூறினார்.