ஜப்பானிடமிருந்து இழப்பீட்டைக் கோர, பசிபிக் கடலோர நாடுகளுக்கு உரிமை உண்டு!
2023-08-26 18:19:40

ஃபுகுஷிமா அணு உலை கதிரியக்க நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் பாய்ந்து சென்று வருவதுடன், இதற்கு கடலோர நாடுகளின் கண்டனமும் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக, அணு மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மார்ஷல் தீவுகள் உள்பட நாடுகளின் துன்பமான நினைவுகள், ஜப்பானின் இச்செயலால் மீண்டும் எழுந்துள்ளன. மேலும், இந்த நாடுகள் ஜப்பானிய அரசின் சுயநலத்துக்கு விலை கொடுக்காமல், அந்நாட்டுக்கு இழப்பீட்டை கோர வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

பசிபிக் பெருங்கடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் தீவுகள், 2ஆவது உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் அணு சோதனை களமாக இருந்திருந்தது. அங்கே அமெரிக்கா 67 அணு சோதனைகளை மேற்கொண்டு, பசிபிக் தீவுகள், கடல் சூழலியல் மற்றும் உள்ளூர் மக்களின் உடல்நலத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜப்பான் மாற்று திட்டத்தை நாடி, கடல் சூழலியலைப் பாதுகாக்கும் சர்வதேசப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று மார்ஷல் தீவுகள் பலமுறை கோரியுள்ளது. சொந்த செலவைக் கருத்தில் கொண்டு அணு மாசுபாட்டு இடர்ப்பாட்டை முழு உலகிற்கும் மாற்றுக் கொடுக்கும் ஜப்பான், எல்லை கடந்த இழப்பீடு செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஒரு நாடு கதிரியக்க கழிவுப் பொருட்களை கடலில் வெளியேற்றுவது குறித்து, தற்போது பல சர்வதேச உடன்படிக்கைகளில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய உடன்படிக்கைகளை மீறினால் அதற்குப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தார்மீகக் கடமை. மேலும், அணு மாசுபாட்டை ஏற்படுத்திய தரப்பிடம் இழப்பீட்டைக் கோருவதற்கு முன்மாதிரியான வழக்குகளும் உண்டு. கனடாவின் ட்ரய்ல்(Trail) உருக்காலை வெளியேற்றிய கந்தக வாயு அமெரிக்காவின் வாஷிண்டனுக்கு தீங்குவிளைவித்து, அமெரிக்காவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சர்வதேச நடுவர் மன்றம் 1938 முதல் 1941ஆம் ஆண்டு வரை தீர்ப்பளித்தது. இந்நிலையில், எல்லை கடந்த மாசுபாட்டை ஏற்படுத்திய நாட்டை பொறுப்பேற்கச் செய்வதற்கான சர்வதேச சட்டப்படியான ஆதாரமாக இவ்வழக்கு பொதுவாகக் கருதப்படுகிறது.

பசிபிக் கடலோர நாடுகள் இவ்வழக்கை மாதிரியாகக் கொண்டு, சட்டப்படி ஜப்பானிடம் இழப்பீடு கோரி, சொந்த உரிமை நலன்களைப் பேணிக்காக்க வேண்டும்.