அமெரிக்காவில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்
2023-08-27 17:25:02

அமெரிக்காவில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஆகஸ்டு 25, 26 ஆகிய நாட்களில் நிகழ்ந்தன. அவற்றில் காயம் மற்றும் உயிரழப்பு ஏற்பட்டது.

25ஆம் நாளிரவு ஓக்லஹோமா நகரில் நடைபெற்ற ரக்பி போட்டியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமுற்றனர் என்று உள்ளூர் காவற்துறை தெரிவித்தது. அன்றிரவு சிக்காகோ நகரில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயமுற்றனர்.

மேலும், மாசசூசெட்ஸ் மாநிலத்தின் பாஸ்டன் நகரில் 26ஆம் நாள் முற்பகல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயமுற்றனர்.

அதேநாள், புளோரிடா மாநிலத்தின் ஜாக்சன்வில்லே நகரிலுள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் கொலைக்காரர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இனப் பகையுடன் தொடர்புடையது என்று தெரிய வந்துள்ளது.