© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

அண்மையில் தென்கொரியா, வியட்நாம், ரஷியா, பிரிட்டன், சிரியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த இணைய இன்ஃப்ளூயன்சர்கள், சிச்சுவான் மாநிலத்தில் புகழ்பெற்ற ஜியுசாய்கோ காட்சித்தலத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏரி, மலை, அருவி, காடு நிறைய எழில்மிக்க இயற்கைக் காட்சியை கண்டு ரசித்துள்ள இணைய இன்ஃப்ளூயன்சர்கள் இந்த அழகைப் பதிவு செய்ய உடனடியாக புகைப்படங்களை எடுத்தனர்.

ஜியுசாய்கோ காட்சித்தலத்திற்கு வருவது இதுவே எனது முதன்முறையாகும். இங்குள்ள அழகு சொற்களால் விவரிக்கப்பட முடியாதது என்று தாய்லாந்தின் இணைய இன்ஃப்ளூயன்சர் உன்விஜித் சுபாபோன் உற்சாகமாக கூறினார்.

இயற்கையின் அற்புதம் அவர்களுக்கு இனிய அதிர்ச்சி தருவதோடு, ஜியுசாய்கோ காட்சித்தலத்தின் அழகை மேலதிக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
