பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் 3 பேர் சாவு
2023-08-28 11:18:21

அமெரிக்காவின் எம்.வி-22பி ஆஸ்ப்ரே வானூர்தி, ஆகஸ்ட் 27ஆம் நாள், ஆஸ்திரேலியாவில் பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் பங்கெடுத்த போது வீழ்ந்து நொறுங்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என்று அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் 27ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இதில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் அமெரிக்க இராணுவப் படையைச் சேர்ந்வர்களாவர் என்பதை ஆஸ்திரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தினை அடுத்து இப்பன்னாட்டுக் கூட்டுப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், கிழக்குத் திமோர், இந்தோனேசியா முதலிய நாடுகளின் 2500க்கு மேலான இராணுவப் படையினர்கள், பிரிடேர்ஸ் ரன் எனும் இராணுவப் பயிற்சியில் பங்கெடுத்தனர் என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் 27ஆம் நாள் தெரிவித்துள்ளது.