ஆகஸ்ட் 30 முதல் சீனாவில் நுழைவதற்கு கோவிட்-19 சோதனை தேவையில்லை
2023-08-28 17:37:50

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள் முதல், சீனாவுக்கு வருபவர்கள் எல்லை நுழைவுக்கு முன் நியூக்ளிக் அமில சோதனை அல்லது ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.