ஜுலையில் சீனாவின் தொழில்துறை நிறுவனங்களின் வருமான நிலவரம்
2023-08-28 15:57:45

இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவில் ஆண்டுக்கு 2கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில்துறை நிறுவனங்களின் இயக்க வருமானம் 73.22 டிரில்லியன் யுவானை எட்டியது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 0.5விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், ஜுலையில் இருந்து மட்டும் பார்த்தால், இந்த தொழில்துறை நிறுவனங்களின் இயக்க வருமான வீழ்ச்சி அளவு, கடந்த ஜுன் திங்களை விட 1.9 சதவீத புள்ளி குறைந்துள்ளது. தொழில்துறை நிறுவனங்களின் இயக்க வருமானத்தில் குறிப்பிட்ட அளவில் மேம்பாடு காணப்பட்டுள்ளதை இது குறிக்கிறது. மேலும், தொழில்துறை நிறுவனங்களின் லாபமும் தொடர்ந்து மீட்சியடையும் போக்கை நிலைநிறுத்தி வருகின்றது.