ஜப்பான் அணுக்கழிவு நீரை வெளியேற்றிய செயல் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2023-08-28 16:48:22

ஜப்பான் அணுக்கழிவு நீரை வெளியேற்றியதால் சீன மக்கள் ஜப்பான் தரப்பின் மீது மனநிறைவின்மை கொண்டது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்டு 28ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீனாவில் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமை நலனைச் சீனா எப்போதுமே சட்டப்படி பேணிக்காத்து வருகிறது. சர்வதேச சமூகத்தின் கடும் சந்தேகம் மற்றும் எதிர்ப்பை ஜப்பான் அரசு பொருட்படுத்தாமல், வலுக்கட்டாயமாக அணுக்கழிவு நீரை கடலில் வெளியேற்றுவது, பொறுப்புணர்வு இல்லாத சுயநலம் கொண்ட செயலாகும். அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இதைக் குற்றச்சாட்டி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்றார்.