அமெரிக்க வர்த்தக அமைச்சரின் சீனப் பயணம்
2023-08-28 14:59:06

அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ராய்மொண்டோ ஆகஸ்ட் 27ஆம் நாளிரவு விமானம் மூலம் பெய்ஜிங்கைச் சென்றடைந்தார். அவர் ஆகஸ்ட் 27முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். ராய்மொண்டோவின் சீனப் பயணம் குறித்து, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷூயுடிங் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீனத் தரப்பு கவனம் செலுத்தப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து அமெரிக்கத் தரப்பிடம் நிலைப்பாட்டை தெரிவுபடுத்துகிறது. மேலும், இரு தரப்புக்குமிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பது, பயனுள்ள ஒத்துழைப்புகளை முன்னெடுப்பது பற்றி அமெரிக்க தரப்புடன் இணைந்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொள்ள சீனா எதிர்பார்க்கிறது என்றார்.