செங்சோவில் நடைபெற்ற 5ஆவது சீனத் தானிய வர்த்தக மாநாடு நடைபெறுதல்
2023-08-28 14:32:58

சீனாவின் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் தரம் சிறந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்குச் சீனாவின் தானிய மற்றும் பொருள் சேமிப்பு அமைப்பு முறை தொடர்ந்து உதவியளித்து வருகிறது. மேலும், இப்பிரதேசங்களில் தானிய உணவுத் தொழில்களின் வளர்ச்சியையும், தரம் மற்றும் செயல்திறன் உயர்வையும் முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் நாள் செங்சோ நகரில் நடைபெற்ற 5ஆவது சீன தானிய வர்த்தக மாநாட்டிலிருந்து இத்தகவல் தெரிய வந்துள்ளது. 5ஆவது சீன தானிய வர்த்தக மாநாடு ஆகஸ்ட் 26முதல் 28ஆம் நாள் வரை ஹெநான் மாநிலத்தின் செங்சோ நகரில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டின் போது, சீன நாடளவில் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் தரம் சிறந்த தானிய உணவு மற்றும் எண்ணெய் பொருட்களின் 3ஆவது கண்காட்சியும் நடைபெற்றுள்ளது.

இதுவரை, சீனாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 388 மாவட்டங்கள், 786 தொழில்நிறுவனங்கள், வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேங்களின் 832 வேளாண் உற்பத்திப் பொருட்களின் இணைய விற்பனை தளங்கள் ஆகியவை இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.