சீனாவில் முக்கிய இலையுதிர்க்கால தானிய அறுவடைப் பணி தொடக்கம்
2023-08-28 16:00:12

சீனாவில் இலையுதிர்க்கள் தானிய அறுவடைப் பணி முழு ஆண்டின் முக்கியப் பகுதியாக கருதப்படுகின்றது. சீனாவில் தற்புதிய காலம் இலையுதிர்க்கால தானிய விளைச்சலுக்கான முக்கிய காலமாகும். நாட்டின் பல்வேறு இடங்களில் அறுவடைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன வேளாண்மை மற்றும் கிராமத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் இலையுதிர்க்கால தானிய விளைச்சல் நிலப்பரப்பு சுமார் 8கோடியே 73இலட்சம் ஹெக்டரை எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது, கடந்த ஆண்டை விட 4இலட்சத்து 67ஆயிரம் ஹெக்டர் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

தவிர, முழு ஆண்டின் தானிய விளைச்சல் அளவு 0.65 டிரில்லியன் கிலோகிராமுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற இலக்கை நனவாக்கும் வகையில், இலையுதிர்க்கால தானிய விளைநிலத்தின் மேலாண்மையில் இவ்வமைச்சகம் வழிகாட்டல் பணியை மேற்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.