சீன வீட்டுப்பயன்பாட்டு மின் சாதன நுகர்வின் உள்ளார்ந்த ஆற்றல்
2023-08-28 15:02:41

இவ்வாண்டின் ஜனவரித் திங்கள் முதல் ஜூலைத் திங்கள் வரை, சீன வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனத் தொழில் துறையின் அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது தொழில் துறையின் சராசரியான அதிகரிப்பு விகிதத்தைக் காட்டிலும் 5.1 விழுக்காடு அதிகமாகும்.

இவ்வாண்டு முதல், சீன வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனத் தொழில் துறையின் கட்டமைப்பின் தீவிரமயமாக்க முன்னேற்றப் போக்கு மென்மேலும் தெளிவாக மாறியுள்ளது. பசுமை சார், புத்திசாலித்தனத் தன்மை வாய்ந்த உயர் தர உற்பத்திப் பொருட்களின் வினியோகம் போதுமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அதோடு, இத்தொழில் துறையின் இயக்கமானது நிதானமாக வளர்ந்து வருகிறது. தொடர்புடைய தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில், சீன வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனச் சந்தையின் அளவு 55 ஆயிரம் கோடி யுவான் ஆகும். 2022ஆம் ஆண்டு, இத்தொகை 65 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இவ்வாண்டில் இத்தொகை 73 ஆயிரம் கோடி யுவானை எட்டக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.