சீனாவில் வெள்ளம் மற்றும் சூறாவளி தடுப்புப் பணியின் ஏற்பாடு
2023-08-29 14:46:51

சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையகமும், சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகமும் 28ஆம் நாள், சீன வானிலைப் பணியகம், சீன நீர்வள அமைச்சகம், சீன இயற்கை மூலவள அமைச்சகம் முதலியவற்றுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில், தற்போதைய வெள்ளம், வறட்சி, சூறாவளி உள்ளிட்டவையின் நிலைமை மற்றும் அவற்றின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பிட்ட பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் சூறாவளி தடுப்புப் பணி இதில் முக்கியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்று மழை இன்னும் தொடர்ந்து, சீனாவின் வடகிழக்கு, தென்கிழக்கு போன்ற பகுதிகளில் பாதிப்பை உண்டாக்கும். சூறாவளி சோலா, ஃபுச்சியன் மற்றும் குவாங்தோங் மாநிலத்தின் கடற்கரைப் பிரதேசங்களை நெருங்குகின்றது. மேலும், உருவாகியுள்ள சூறாவளி கைய்கெய், சீனாவின் கடற்கரைப் பிரதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிரவும், வட மேற்குப் பகுதியில் வறட்சி தொடர்ந்து நிலவி வருகிறது.