சீனாவில் ஏ.ஐ. மூலம் பட்டம் பெறுவதற்கான ஆய்வறிக்கை உருவாக்கும் செயல் குறித்து சட்ட முன்வரைவு
2023-08-29 14:50:38

பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்தி, பட்ட அமைப்புமுறையின் நடைமுறையாக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பட்ட சட்ட முன்வரைவை சீன அரசவை 28ஆம் நாள் திங்கள்கிழமை காலை சமர்ப்பித்தது. சீனாவில் சட்டங்களை இயற்றும் அமைப்பாக இருக்கும் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி அதே நாள் பெய்ஜிங்கில் நடத்தியுள்ள வழமைக் கூட்டத்தில், சீன நீதித் துறை அமைச்சர் ஹெ ரொங் இச்சட்ட முன்வரைவு தொடர்பாக விளக்கம் அளித்தார்.

பிறரின் அடையாளத்தை திருடுதல், பிறருடைய பெயர்களைப் பயன்படுத்துதல் ஆகியவை மூலம் பல்கலைக்கழகத்தில் சேரும் தகுநிலையைப் பெறுவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை முற்றிலும் பயன்படுத்தி ஆய்வறிக்கையை உருவாக்குபவர், பட்டம் வழங்கும் தரப்பு சட்டவிரோதமாக பட்டம் வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வரையறுக்கப்படும் சட்ட பொறுப்புகள் இச்சட்ட முன்வரைவில் விதிக்கப்படுகின்றன.