டிரம்ப் மீதான குற்றச்சாட்டு வழக்குக்கு 2024ஆம் ஆண்டு மார் 4ஆம் நாள் தீர்ப்பு
2023-08-29 14:58:37

2020ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தலில், முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு வழக்கில் 2024ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 4ஆம் நாள் தீர்ப்பு அளிக்கும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாவட்டத்தின் கூட்டாட்சி நீதி மன்றத்தின் நீதிபதி டன்யா சுட்கன், உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 28ஆம் நாள் தீர்மானிதுள்ளார். இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும் தேதியை 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களுக்கு ஒத்திவைக்க விரும்பிய டிரம்பின் சட்டக் குழுவின் கோரிக்கையை நீதிபதி டன்யா சுட்கன் நிராகரித்தார்.

இதற்குப் பிறகு, இந்த தேதி குறித்து மேல்முறையீடும் செய்ய வேண்டும் என்று டிரம்ப் சமூக ஊடகத்தின் மூலம் பதிவிட்டார். இது தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.