சீன-பிரிட்டன் உறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விருப்பம்
2023-08-29 16:54:18

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பை ஏற்று, பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி ஆகஸ்ட் 30ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 29ஆம் நாள் தெரிவித்தார்.

கிளவர்லியின் சீனப் பயணத்தின்போது, சீன-பிரிட்டன் உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து இருதரப்பும் விவாதம் நடத்த உள்ளன. சீனாவுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் ஆழ்ந்த பரிமாற்றம் மேற்கொண்டு புரிந்துணர்வை அதிகரித்து, இருநாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என சீனா விரும்புவதாக அவர் கூறினார்.