வல்லரசு அரசியல் மற்றும் தன்னலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜப்பான்
2023-08-29 16:43:25

ஜப்பான் அணுக்கழிவு நீரை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக ஜப்பான் தரப்பு அண்மையில் தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 29ஆம் நாள் கூறுகையில், உலகளவில் சுமார் 200 நாடுகள் உள்ளன. அமெரிக்காவைத் தவிர, ஜப்பானின் இச்செயலுக்கு ஆதரவு அளித்த வேறு நாடு இருக்கா?மிகப் பெரும்பாலான நாடுகளும், ஜப்பானின் பொது மக்களும் இதை எதிர்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, விவாதத்துக்குத் தேவையற்ற உண்மையாகும். வல்லரசு அரசியல் மற்றும் தன்னலத்துக்கு ஜப்பான் முக்கியத்துவம் அளித்து, சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேசப் பொது நலனை கருத்தில் கொள்ளாமல் இருப்பதை, ஜப்பானின் இச்செயல் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.