பெய்ஜிங்கில் ஹே லிஃபேங்-ராய்மொண்டோ சந்திப்பு
2023-08-29 19:29:53

சீனத் துணைத் தலைமை அமைச்சர் ஹே லிஃபேங் 29ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்க வணிக அமைச்சர் ராய்மொண்டோவுடன் சந்திப்பு நடத்தினார். பாலி தீவு சந்திப்பில் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும், பொது அக்கறை கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் மனம் திறந்து, நடைமுறைக்கு ஏற்ற ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தினர்.

301ஆவது சட்டப் பிரிவின்படி சீனாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள சுங்கவரி, சீனா மீதான அதன் ஏற்றுமதி கட்டுப்பாடு, இருநாடுகளிடையே இருவழி முதலீட்டுக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து சீனா தனது கவனத்தைத் தெரிவித்துள்ளது.

தொடர்புகளை நிலைநிறுத்தவும், இருநாட்டு தொழில் நிறுவனங்களின் நடைமுறை ஒத்துழைப்புகளை ஆதரிக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.