மேலை நாடுகளின் தடைகள் தோல்வி:ஈரான்
2023-08-29 18:46:11

ஈரான் மீது மேலை நாடுகள் தடை நடவடிக்கைகளையும் ஈரானை தனிமைப்படுத்தும் கொள்கையையும் மேலை நாடுகள் மேற்கொண்ட போதிலும், பொருளாதார வளர்ச்சியை ஈரான் கண்டுள்ளது. மேலை நாடுகளின் தடை கொள்கை தோல்வியடைந்துள்ளதை உண்மைகள் நிரூபித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தலைவர் ரைஸி ஆகஸ்ட் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அணு ஆற்றல் பிரச்சினை பற்றி அவர் குறிப்பிடுகையில், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான உடன்படிக்கையை ஈரான் தொடர்ந்து நிறைவேற்றி, தொடர்புடைய பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் என்று தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முடிவின்படியும், சொந்த மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த நாடுகளின் விருப்பத்தின்படியும் ஈரான் செயல்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.