சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2023-08-29 10:46:15

சீன வணிக அமைச்சர் வாங் வேன்டௌ சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வணிக அமைச்சர் ஜினா ராய்மொண்டோவுடன் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். பாலி தீவு உச்சிமாநாட்டின் போது சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதைக் குறித்து இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, பொது அக்கறை கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் ஆகியவற்றை இரு தரப்பும் பகுத்தறிவு முறையில் மனம் திறந்து ஆக்கப்பூர்வமான பரிமாற்றத்தை மேற்கொண்டன.  

சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக சட்டத்தின் 301ஆவது பிரிவு, செமிகண்டக்டர் கொள்கை, முதலீட்டுத் தடை, பாகுபாட்டுடன் கூடிய மானியம், சீனத் தொழில்நிறுவனங்கள் மீதான தடை நடவடிக்கை முதலியவற்றுக்கு வாங் வேன்டௌ கடும் கவலை தெரிவித்தார்.

சீன-அமெரிக்க வணிக அமைச்சகங்களுக்கிடையே புதிய தொடர்பு வழியை நிறுவியுள்ளதாக வாங் வேன்டௌ மற்றும் ராய்மொண்டோ அறிவித்தார்கள். குறிப்பிட்ட வணிக பிரச்சினைகளின் தீர்வைத் தேடிபார்க்கும் விதம், இரு நாட்டுத் துணை அமைச்சர் நிலை அரசு அதிகாரிகளால் உருவான சிறப்புக் குழு நிறுவப்பட்டது. தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொள்வர். துணை அமைச்சர் நிலைக் கூட்டங்களை ஆண்டுக்கு 2 முறை இந்தப் பணிக் குழு நடத்தவுள்ளது. வழக்கமான தொடர்பு மேற்கொள்ளவும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முறை சந்திக்கவும் இரு நாட்டு வணிக அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், தத்தமது ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு முறைமையை விளக்கி கூறி பரஸ்பர தொடர்பை மேம்படுத்தும் விதமாக, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் தகவலுக்கான பரிமாற்ற முறைமையை இரு தரப்பும் துவக்கின.