ரஷிய-இந்தியத் தலைவர்கள் விவாதம்
2023-08-29 10:42:21

கிரெம்ளின் மாளிகை இணையத்தளம் 28ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, ரஷிய அரசுத் தலைவர் புதின், அதே நாள், இந்திய தலைமையமைச்சர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார். இரு தரப்புறவு, சர்வதேச ஒத்துழைப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

அண்மையில், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதற்கு புதின் வாழத்து தெரிவித்தார். விண்வெளி துறையின் ஒத்துழைப்பை மேலும் வளர்க்க இரு தரப்பும் விருப்பம் தெரிவித்தன. தவிரவும், பொருளாதார வர்த்தகத் துறை ஆக்கப்பூர்வமான முன்னேற்றமடைந்துள்ளதை இரு நாட்டுத் தலைவர்கள் மீளாய்வு செய்துள்ளனர். எரியாற்றல் துறையின் முக்கிய திட்டப்பணிகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சரக்குப் போக்குவர்த்துக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை கூட்டாக விரிவாக்கவும் அவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

மேலும், அண்மையில், தென்னாப்பிரிக்க ஜோன்னெஸ்பேர்க்கில் நடைபெற்ற 15ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.