பெய்ஜிங்கில் இரவு நேர பண்பாட்டு நிகழ்ச்சிகள்
2023-08-30 19:33:43

2023 சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் 2 முதல் 6ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. அப்போது இரவு நேர பண்பாட்டு நிகழ்ச்சிகள் பல வழங்கப்பட உள்ளன. காட்சியரங்குகளில் ஒன்றான ஷோவ்காங் பூங்காவில் வண்ணமிகு விளக்கு ஒளிகள் இப்பூங்காவின் அழகை அதிகரிக்கும். மேலும், சுவர் ஓவியத்துக்குப் புகழ்பெற்ற ஃபாஹாய் கோயில், இரவு பயணத்துக்குத் திறந்து வைக்கப்படும். தவிரவும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிடமான லாங்யூவான் பூங்காவில், பொருள் சாரா மரபுச் செல்வப் பொருட்களின் தயாரிப்பு, பழைய பொருள் சந்தை, திறந்த வெளியில் இசை நிகழ்ச்சி, முரசு ஒலியுடன் பெய்ஜிங் பேச்சு வழக்கில் நாடக அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளன.