வெளிநாட்டு முதலீட்டின் விரிவாக்கத்துக்கு சீனாவின் முயற்சி
2023-08-30 19:22:36

சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சுன்சியாவ் ஆகஸ்டு 30ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், வெளிநாட்டு முதலீட்டைப் மேலும் விரிவாக்கி, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கான சேவை அமைப்புமுறையை மேம்படுத்தி, அன்னிய முதலீட்டை நிதானப்படுத்தும் புதிய கொள்கைகளைச் செயல்படுத்தும் விதம், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், வணிகச் சூழலுக்கான கண்காணிப்பு அமைப்புமுறையை மேம்படுத்தி, ஆண்டுதோறும் மற்றும் காலாண்டுக்கு ஒரு முறை வணிகச் சூழல் ஆய்வை மேற்கொண்டு, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, சீனாவில் வெளிநாட்டு வணிகர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.