லீ ச்சியாங் மற்றும் ஜினா ரேமண்டோ அம்மையாரின் சந்திப்பு
2023-08-30 11:05:33

சீனத் தலைமையமைச்சர்  லீ ச்சியாங் ஆகஸ்டு 29ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்க வணிக அமைச்சர் ஜினா ரேமண்டோ அம்மையாரைச் சந்தித்து பேசினார்.

சீரான மற்றும் நிதானமான சீன-அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கும் உலகத்துக்கும் துணை புரியும். பரஸ்பர மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவை சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான சரியான வழியாகும் என்று லீ ச்சியாங் தெரிவித்தார். பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது. இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சியை மேம்படுத்தி, சீனாவும் அமெரிக்காவும் சரியான திசையை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும் என்று சீனா விரும்புவதாக லீ ச்சியாங் தெரிவித்தார்.

பொருளாதாரத்தைச் சீனா வளர்ப்பது மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகியவற்றைப் பைடன் அரசு ஆதரிக்கின்றது. சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை. சீனாவுடனான தொடர்பை முற்றிலும் துண்டிக்க முற்படுவதில்லை. சீனாவுடன் தொடர்பை நிலைநிறுத்தி, அமெரிக்க-சீன இயல்பான பொருளாதார மற்றும் வர்த்தக உறவைப் பேணிகாத்து, இரு நாட்டு உறவின் நிதானமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஜினா ரேமண்டோ அம்மையார் கூறினார்.