பெய்ஜிங்கில் ஹான் ட்சேங்-ஜேம்ஸ் கிளவர்லி சந்திப்பு
2023-08-30 19:49:57

சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ட்சேங் ஆகஸ்ட் 30ஆம் நாள் பெய்ஜிங்கில், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியுடன் சந்திப்பு நடத்தினார்.

ஹான் ட்சேங் கூறுகையில், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சீன-பிரிட்டன் உறவின் சீரான வளர்ச்சிக்கு அடிப்படையாகும். இருநாடுகள் தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வணிகச் சூழலை உருவாக்கி, நடைமுறை ஒத்துழைப்புக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை நாட வேண்டும் என்று தெரிவித்தார்.

கிளவர்லி கூறுகையில், உலகளவில் செல்வாக்குமிக்க பெரிய நாடான சீனா, சர்வதேச நிர்வாகத்தில் மேலும் பெரும் பங்காற்றி வருகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை நிவாரணப் பணிக்கு சீனா அளித்துள்ள பங்களிப்பை பிரிட்டன் பாராட்டுவதோடு, சீனாவுடன் இணைந்து உயர்நிலை தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒத்த கருத்துக்களை எட்டி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும் விரும்புகிறது என்று தெரிவித்தார்.