அரபு நாடாளுமன்றத் தலைவருடன் வாங் யீ சந்திப்பு
2023-08-30 17:05:32

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளி விவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங் யீ ஆகஸ்ட் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் அரபு நாடாளுமன்றத் தலைவர் அடெல் அல் அசூமியுடன் சந்திப்பு நடத்தினார்.

ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரவளிக்கவும், நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்கவும், நாகரிகப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புவதாக வாங் யீ குறிப்பிட்டார். அதோடு, அதிகாரப்பூர்வ உறுப்பினராக பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள எகிப்து, சௌதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பாலஸ்தீன பிரச்சினை கூடியவிரைவில் நியாயமாகத் தீர்க்கப்படுவதற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவை நம்பத்தக்க கூட்டாளியாக கருதிய அரபு தரப்பு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வழங்கிய முக்கிய முன்னெடுப்புகளை பாராட்டுகளுடன் ஆதரிப்பதாகவும், அரபு-சீன உறவை புதிய நிலைக்கு முன்னேற்ற விரும்புவதாகவும் அசூமி தெரிவித்தார்.