திபெத்திய மருத்துவ பண்பாட்டிற்கு பன்னாட்டு இணைய இன்ஃப்ளூயன்சர்கள் பாராட்டுக்கள்
2023-08-30 15:04:33

அண்மையில், தென் கொரியா, வியட்நாம், ரஷியா, பிரிட்டன், சிரியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த இணைய இன்ஃப்ளூயன்சர்கள் சீன ஊடகக் குழுமத்தின் அறிவிப்பாளர்கள்களுடன் இணைந்து சீன ஸிச்சுவான் மாநிலத்தின் அபா சோவிலுள்ள ரௌயர்கை வட்டத்தின் திபெத்திய மருத்துவமனையில் பார்வையிட்டு திபெத்திய மருத்துவத்தை அனுபவித்து கேட்டறிந்தனர்.

குத்தூசி மருத்துவம் மிகவும் ஆச்சரியமானது என்று தாஜிக்ஸ்தானைச் சேர்ந்த இணைய இன்ஃப்ளூயன்சர் ஐடிபெக் பாராட்டினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறுடைய சீனப் பாரம்பரிய மருத்துவவியல் உலகத்தின் மதிப்பை பெறத் தக்கது என்று பிரிட்டனின் இணைய இன்ஃப்ளூயன்சர் பாரெட் லீ ஜான் கருத்து தெரிவித்தார்.