தொழில்நுட்ப கோளாறினால் பிரிட்டனின் விமானப் போக்குவரத்து பாதிப்பு
2023-08-30 11:15:50

பிரிட்டனின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கணினி அமைப்புகளில் 28ஆம் நாள் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்தி வைக்கப்பட்டன. இக்கோளாறு சில மணி நேரங்களில் தீர்க்கப்பட்டாலும், விமானச் சேவை முழுவதும் இயல்புக்குத் திரும்புவதற்கு இன்னும் சில நாட்கள் தேவை என்று அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அதிகாரி மார்க் ஹார்பர் 29ஆம் நாள் தெரிவித்தார்.