நிலவில் ஆக்ஸிஜன் கண்டுபிடிப்பு: சந்திரயான்-3
2023-08-30 10:44:18

நிலவின் மேற்பரப்பில் ஆக்ஸிஜன் மற்றும் பல கனிமங்கள் நிலவியுள்ளதாக சந்திரயான்-3 விண்கலம் கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 29ஆம் நாள் தெரிவித்தது.

ஆகஸ்ட் 23ஆம் நாள் நிலவின் ஆய்வுக்கான சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையறங்கிச் சோதனை செய்யத் துவங்கியது. நிலவின் மேற்பரப்பில் இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான் முதலிய கனிமங்களை சந்திரயான்-3இன் பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது.