பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் கொள்கை
2023-08-30 15:10:55

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 28ஆம் நாள் முதல் செப்டம்பர் முதல் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறுகின்றது. இவ்வாண்டு தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிலைமை பற்றிய அறிக்கை, ஆழ்ந்தாராய்வுக்காக, இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வாண்டில் இருந்து  இத்திட்டம் பொதுவாக சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீன பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைந்து வருகின்றது. இவ்வாண்டின் பிற்பாதியில், உள் நாட்டு தேவையை விரிவாக்குவது, நம்பிக்கையை அதிகரிப்பது, இடர்பாட்டை தடுப்பது, பொருளாதார வளர்ச்சியை நனவாக்குவது ஆகியவற்றிற்கு ஒட்டுமொத்த கொள்கையை வலுப்படுத்த வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.