காபொன் அரசுத் தலைவரின் முதல் வெளிப்படை மனப்பான்மை
2023-08-31 10:40:37

காபொன் அரசுத் தலைவர் அலி-பென் போங்கோ ஒண்டிம்பா அரசுத் தலைவர் அலுவலகத்தின் மூலம் செய்தி ஊடகங்களுக்குக் காணொலி ஒன்றை  வெளியிட்டார். காபொன் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் போங்கோ வெளிப்படையான மனப்பான்மையுடன் வெளியிட்ட முதல் காணொலி இதுவாகும் என்று சில செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார். பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த மக்கள் இது குறித்து பேசுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

26ஆம் நாள் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போங்கோ 64.27% வாக்குகளைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக காபோன் தேர்தல் மையம் 30ஆம் நாள் விடியற்காலை அறிவித்தது. இதனையடுத்து, பத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் காபோன் 24 என்ற தொலைக்காட்சி நிலையங்களின் வழியாக "நிறுவன மாற்றம் மற்றும் மீட்புக் குழு" என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் இத்தேர்தல் முடிவுகள் பயன் அற்றவை என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தங்களே அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எனத் தெரிவித்துள்ளதோடு, தேசிய நிறுவனங்கள் கலைக்கப்பட்டதாகவும், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.