சீனாவின் மென் பொருள் வருமானம் அதிகரிப்பு
2023-08-31 14:35:45

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில், சீனாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சேவைத் துறை நிதானமாக இயங்கி வருகிறது. மென் பொருள் துறையின் வருமானம் 6 இலட்சத்து 45 ஆயிரத்து 700 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்துறையின் மொத்த லாபமும் விரைவாக அதிகரித்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 13.4 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிரவும், பெய்ஜிங், ஷாங்காய், ஷென்சென் முதலிய முக்கிய நகரங்களில் மென் பொருள் சேவைத் துறையின் வளர்ச்சி அளவு, நாட்டின் சராசரியான நிலையை விட உயர்வாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.