அமெரிக்க தளபதி ஸ்டில்வெல்லின் பின் தலைமுறையினருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஷி ச்சின்பிங்
2023-08-31 10:59:24

ஆகஸ்ட் 29ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க தளபதி ஸ்டில்வெல்லின் பேரன் ஜாங் ஈஸ்டர்புரூக்கிற்கு பதில் கடிதம் அனுப்பினார்.

இக்கடிதத்தில் ஷி ச்சின்பிங் கூறுகையில், ஈஸ்டர்புரூக் அனுப்பிய கடிதத்தில், தளபதி ஸ்டில்வெல் மற்றும் ஸ்டில்வெல் குடும்பத்திற்கும் சீனாவுக்குமிடையிலான நட்புறவு கதைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஸ்டில்வெல் குடும்பத்திலிருந்து சீன மக்களின் மீது அமெரிக்க மக்களின் நட்புறவை உணர்ந்து பார்க்கலாம் என்றார்.

பொது மக்களுக்கிடையிலான உறவே சீன-அமெரிக்க உறவின் அடிப்படையாகும். எனவே, இரு நாட்டு மக்கள், பரிமாற்றத்தை வலுப்படுத்தி, புரிந்துணர்வை அதிகரித்து, ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு நாட்டுறவுக்கு புதிய உந்து சக்தி அளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் கடிதத்தில் வலியுறுத்தினார்.