ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு குட்ரெஸ் கண்டனம்
2023-08-31 14:53:19

ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் காபொன் தேர்தலுக்குப் பிறகான நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சியை ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் ஆகஸ்டு 30ஆம் நாள் செய்தித் தொடர்பாளரின் மூலம் வெளியிட்ட அறிக்கையில் கண்டித்தார்.

இது தொடர்பாக குட்ரேசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் வெளியிட்ட அறிக்கையில், காபொன் நிலைமையில் குட்ரெஸ் கவனம் செலுத்தி வருவதாகவும், எந்தவித ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பையும் அவர் வன்மையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.